Last Updated : 25 Mar, 2015 09:57 AM

 

Published : 25 Mar 2015 09:57 AM
Last Updated : 25 Mar 2015 09:57 AM

நாட்டின் வயதான பெண்மணி குஞ்சன்னம் காலமானார்

நாட்டின் மிக வயதான பெண்மணியான கேரளத்தைச் சேர்ந்த குஞ்சன்னம் அந்தோனி நேற்று தனது 112-வது வயதில் காலமானார்.

முதுமை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்காக திருச்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை காலமானார்.

2014-ம் ஆண்டு இவரை நாட்டின் மிக வயதான பெண்மணி என்று லிம்கா சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கியது. 1903-ம் ஆண்டு மே 20-ம் தேதி குஞ்சன்னம் ஞானஸ்நானம் பெற்றதற்கான தேவாலய சான்றிதழை அவரது உறவினர்கள் வைத்துள்ளனர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த இப்பெண்மணி திருமணம் செய்துகொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x