Last Updated : 10 Mar, 2015 12:46 PM

 

Published : 10 Mar 2015 12:46 PM
Last Updated : 10 Mar 2015 12:46 PM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோற்க யாதவ், பூஷண் சதி: மூத்த தலைவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆம் ஆத்மியை தோல்வி அடையச் செய்ய யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் சதி செய்தனர் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தன்னிச்சை யாக செயல்படுவதாக கட்சியின் நிறுவனர் தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து கேஜ்ரிவாலை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் செயற்குழுவுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் ஊடகங்களுக்கு பேட்டியளித்த தால் ஆம் ஆத்மியின் உட்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய். கட்சியின் பொதுச்செயலர் பங்கஜ் குப்தா, சஞ்சய் சிங் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் தொண்டர்களுடன் நயவஞ்சகமாக பேசியுள்ளனர்.

தேர்தலில் நாங்கள் பிரச்சாரம் செய்யப் போவதில்லை. நீங்களும் பிரச்சாரம் செய்ய வேண்டாம். கட்சி தோல்வி அடைய வேண்டும். அதன்பிறகுதான் கேஜ்ரிவாலுக்கு புத்திவரும் என்று கூறியுள்ளனர்.

மகாராஷ்டிர கட்சித் தலைவர் அஞ்சலி தமானியா முன்னி லையிலும் மைசூரைச் சேர்ந்த கட்சி தொண்டர்களிடமும் இதுபோல பேசியுள்ளனர். கட்சிக்கு நிதி கொடுக்க வேண்டாம், நிதி திரட்ட வேண்டாம் என்றும் தடுத்துள் ளனர்.

தேர்தலுக்கு இரண்டு வாரங் களுக்கு முன்பு டெல்லி மாநில கட்சித் தலைவர் அசீஷ் கேதன், பிரசாந்த் பூஷணை தொடர்பு கொண்டு டெல்லி பிரச்சாரத்தை தலைமை ஏற்று நடத்தும்படி கோரியுள்ளார்

அதனை ஏற்க மறுத்துவிட்ட பிரசாந்த் பூஷண், கட்சி தோல்வி யடைய வேண்டும், அப்போதுதான் தலைமைக்கு புத்திவரும் என்று மிரட்டியுள்ளார்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சியின் மூத்த தலைவர் சாந்தி பூஷண் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். அவரது மகன் பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரும் கட்சிக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன.

தேர்தலின்போது நிருபர்கள் கூட்டத்தை கூட்டி கட்சிக்கு எதிராகப் பேசப் போவதாக பிரசாந்த் பூஷண் அடிக்கடி மிரட்டினார். மூன்று பேரையும் சரிகட்டுவதே முக்கிய வேலையாக இருந்தது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x