Last Updated : 14 Mar, 2015 09:22 AM

 

Published : 14 Mar 2015 09:22 AM
Last Updated : 14 Mar 2015 09:22 AM

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க ஆர்எஸ்எஸ் மீண்டும் வலியுறுத்தல்: பிரிவினைவாத தலைவர் விடுதலைக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ்-ஸின் உயர்நிலை அதிகார குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்போலே செய்தியாளர்களிடம் கூறியது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

அம்மாநிலத்தில் தேசிய கட்சி யான பாஜக ஆட்சியில் முக்கிய இடம் பிடித்திருப்பதை புதுமையான சோதனை முயற்சியாகவே ஆர்எஸ்எஸ் பார்க்கிறது. அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். காஷ்மீரில் தேசிய கட்சி ஆட்சியில் இருப்பதை அண்டை நாடுகள் உணர வேண்டும். அரசியல் மாற்றம் என்பது ஒருவகையில் சமூக மாற்றம்தான்.

காஷ்மீரில் கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு கள் தொடக்க நிலையில் ஏற் படும் பிரச்சினைகள்தான். காஷ் மீரில் பிரிவினைவாத தலை வர் விடுதலை செய்யப்பட்டிருப்பது உட்பட இப்போது அங்குள்ள சூழ் நிலைகள் கவலை அளிக்கிறது.

இந்த விடுதலை விஷயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை அல்ல. இது தேசிய பிரச்சினை. இதனால் நாடே கோபமடைந்துள்ளது. பிரிவினை வாத தலைவர் விடுதலைக்கு பாஜகவும், பிரதமருக்கும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் நடப்பது நல்லதாகபடவில்லை.

கடந்த 10 மாத ஆட்சியில் மோடி அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா மோசமானது என்று கூறும் அளவுக்கு இல்லை. எனினும் இதுபோன்ற விஷயங்களில் பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிஸான் சங்கம் ஆகியவற்றுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.

தாய் மதத்துக்கு திரும்பும் நிகழ்ச் சிகளை ஆர்எஸ்எஸ் நடத்துவ தில்லை. எனவே அதுபற்றி பேச வேண்டியது இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு இயல் பாகவே இந்தியாவின் கிராமப் பகுதிகளிலும், மலைவாழ் பகுதி களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. பிரசாரகராக இருந்த வர் பிரதமராக உள்ளார் என்பதால் மட்டும் ஆர்எஸ்எஸ் வேகமாக வளரவில்லை. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் பிரசாரகர் பிரதமராக இருந்துள்ளார் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x