Published : 13 Apr 2014 01:49 PM
Last Updated : 13 Apr 2014 01:49 PM
பெல்லாரியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.10.2 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் ஆணைய அதிகாரி கள் சனிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
பணத்துடன் பா.ஜ.க.வின் துண்டறிக் கைகளும் இருந்ததால் ரெட்டி சகோதரர் களுக்கு நெருங்கிய நண்பரான ஸ்ரீராமலுவிற்கு இதில் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடந்துவருகிறது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள சத்யநாராயணாபேட்டையில் உள்ள கணேஷ் காலனியில் பாபுலால் என்பவர் வசித்து வருகிறார். நிதி நிறுவனம் நடத்திவரும் அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு பெரிய அளவில் பண பரிமாற்றம் நடைபெறப் போவதாக பெல்லாரி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது.
கட்டு கட்டாக நோட்டுகள்
அதனைத் தொடர்ந்து பெல்லாரி மாவட்ட தேர்தல் அதிகாரி அமலன் ஆதித்யா பிஸ்வாஸ் தனது குழுவின ருடன் வெள்ளிக்கிழமை இரவு பாபுலாலிடம் வீட்டில் சோதனை நடத்த தொடங் கினார்.
பாபுலாலின் வீட்டில் இருந்த அலங் கார அலமாரியில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் சுமார் ரூ. 5 லட்சம் சிக்கியது. அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோக்கள் மற்றும் பெட்டிகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கின. இது தவிர பாபுலாலின் பூஜை அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்பு பெட்டியில் சுமார் ரூ.45 லட்சம் சிக்கியது.
அதே நேரத்தில் பெல்லாரியில் உள்ள பாபுலாலின் இரு மகள்களுக்கு சொந்தமான இரு வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட னர். அங்கும் பீரோ, லாக்கர், அலமாரி என பல இடங்களில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் சிக்கியது. இதை தொடர்ந்து பெல்லாரி நட்ராஜ் திரை யரங்கம் அருகேயுள்ள பாபுலாலுவின் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரூ. 4.5 கோடி ரொக்கப் பணம் சிக்கியது.
தங்கக்கட்டிகள்
பாபுலாலின் வீட்டில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கியதைப் போலவே இரு பெட்டிகளில் தங்கக் கட்டிகள் சிக்கின. அதேபோல கையெழுத்திடப்பட்டு பணம் நிரப்பப் படாமல் ஏராளமான காசோலைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம், வீட்டுமனைகளின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர சுமார் 70 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் பித்தளைப் பொருள்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. பாபுலாலின் 3 வீடுகள் மற்றும் அலுவலகத்தில் கைப் பற்றப்பட்ட ரொக்கத்தை எண்ணும் பணியில் இரண்டு பணம் எண்ணும் மெஷின்களின் உதவியுடன் 20 தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ரூ. 9 கோடி ரொக்கம்
பாபுலாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக பெல்லாரி துணை காவல் கண்காணிப்பாளர் சி.கே.பாபா கூறியதாவது:
“எனக்கு கிடைத்த தகவலின்படி பாபு லால் வீட்டில் இருந்து ரூ.9 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருக் கிறது” என்றார்.
வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணமே
பெல்லாரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் ஆணை யர் அணில்குமார் ஜா-விடம் 'தி இந்து' சார்பாக பேசினோம்.
'பெல்லாரியில் பாபுலால் என்பவரிடம் சுமார் 9 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெல்லாரியில் வேறொருவரிடம் இருந்து 1.2 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
பெல்லாரியில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தவைதான் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கைப்பற்றப் பட்டிருக்கும் பணத்திற்கும் பா.ஜ.க. வேட்பாளரான ஸ்ரீராமலுவிற்கும் தொடர்பிருக்கிறதா என விசாரித்து வருகிறோம். பாபுலாலின் வீட்டில் சோதனையிட்டது தொடர்பாக முழுமையான அறிக்கை வெளியான பிறகே முழுமையான விவரம் தெரிய வரும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT