Published : 10 Mar 2015 04:39 PM
Last Updated : 10 Mar 2015 04:39 PM
காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் பாஜக, தேச விரோத செயல்பாடுகளை ஊக்குவித்து வருகிறது என்று அசாம் முதல்வர் தருண் கோகாய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறும் போது, “ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதன் மூலம் பாஜக தேச விரோத செயல்களுக்குத் துணை போகிறது.
இதன் மூலம் பாஜக அதிகார வெறி பிடித்த கட்சி என்பதும் இதனால் தேச நலன்கள் மீது அக்கட்சிக்கு அக்கறை இல்லை என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாதியான மஸரத் ஆலம் விடுதலை குறித்து அசாம் முதல்வர் தருண் கோகாய் இவ்வாறு கூறியுள்ளார்.
மஸரத் ஆலமை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் பாஜக நேற்று முதல்வர் முப்தி முகமது சயீதிடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், பிரிவினைவாதிகளுடன் சுமுகமாகப் பேச்சு வார்த்தை நடத்தவே இந்த விடுதலை நடவடிக்கை என்று மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT