Last Updated : 19 Mar, 2015 09:45 AM

 

Published : 19 Mar 2015 09:45 AM
Last Updated : 19 Mar 2015 09:45 AM

சூரிய மின் ஆற்றலில் உலகைச் சுற்றிவரும் சோலார் இம்பல்ஸ்-2 விமானம் வாரணாசிக்குப் பறந்தது

எந்த ஓர் எரிபொருளும் இல்லாமல் முழுக்க முழுக்க சூரிய மின் ஆற்றலின் மூலம் இயங்கும் உலகின் முதல் மற்றும் ஒரே விமானமான `சோலார் இம்பல்ஸ்‍‍-2' நேற்று அகமதாபாத் தில் இருந்து வாரணாசிக்குப் பறந்தது.

கடந்த 9ம் தேதி அபு தாபியில் இருந்து உலகத்தைச் சுற்றி வரும் பயணத்தை அந்த விமானம் தொடங்கியது. இந்த விமானம் 10ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியது.

இந்த விமானத்தை மஸ்கட்டில் இருந்து அகமதாபாத் வரை சுவிட்சர்லாந்து நாட்டு விமானி பெர்ட்ராண்ட் பிக்கார்ட் இயக்கினார். பின்னர், இந்தத் திட்டத்தின் இணை நிறுவனர் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் அகமதா பாத்தில் இருந்து வாரணாசிக்கு விமானத்தை இயக்கினார்.

இந்த விமானம் நேற்று காலை 7.18 மணி அளவில் வாரணா சிக்குப் புறப்பட்டது. இது திட்டமிட்டதற்கு மாறாக சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

வாரணாசியில் இருந்து புறப் பட்ட அந்த விமானம் அடுத்த தாக மியான்மர், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றத் துறையின் தாமதம்

இதற்கிடையே, மார்ச் 13ம் தேதியே இந்த விமானம் வாரணாசிக்குச் செல்வதாக இருந்தது. ஆனால் சுங்கம் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் ஏற்படுத்திய தாமதத்தால், மார்ச் 18ம் தேதிக்குப் பயணத் திட்டத்தை மாற்ற வேண்டி இருந்ததாக விமானிகள் கூறினர்.

வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்பட வேண்டுமெனில், அவை சுங்கம் மற்றும் குடியேற்றத் துறையிட மிருந்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறே விமானிகளும் விண் ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தத் துறைகளின் அதிகாரிகள் நிர்வாக நடைமுறை கட்டுப்பாடுகளை முன்வைத்த தால், விமானம் தாமதமாகப் பறந் தது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x