Last Updated : 15 Mar, 2015 11:14 AM

 

Published : 15 Mar 2015 11:14 AM
Last Updated : 15 Mar 2015 11:14 AM

வடகிழக்கு மாநில தூதராக மேரி கோம் நியமனம்

வடகிழக்கு மாநிலங்களின் விளம் பரத் தூதராக நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் விரைவில் நியமிக்கப் பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

வடகிழக்கு பிராந்தியம் பல்வேறு துறைகளில் ரூ.2.4 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பு களைக் கொண்டதாகும். எனவே இப்பகுதியின் வளம், செழிப்பு, கலாச்சார, வர்த்தக வாய்ப்பு களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்காக ஒரு நபரை நியமிக்க விரும்பினோம்.

இதற்குத் தகுதியானவர் என்ற வகையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை வடகிழக்கு மாநிலங்களின் விளம்பரத் தூதராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடு களிலும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு சக்தியாக மேரி கோம் விளங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

8 மாநிலங்களை உள்ளடக் கியது வடகிழக்கு இந்தியப் பகுதி. இதில் ஒன்றான மணிப்பூரைச் சேர்ந்தவர் மேரி கோம். இவர் உலக குத்துச்சண்டை போட்டி யில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றதோடு, 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x