Published : 19 Mar 2015 10:39 PM
Last Updated : 19 Mar 2015 10:39 PM
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடரும் என இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழுவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் அதன் தலைவர் யூத்வீர் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழகம், கர்நாடகா, உபி, பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகம் சார்பில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, பொருளாளர் ஈ.பாலசுப்பரமணியம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT