Published : 04 Mar 2015 12:48 PM
Last Updated : 04 Mar 2015 12:48 PM
உத்தரப்பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு.
புதிதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுளதாக சஞ்சய் காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை நோயினால் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தவிர மேலும், 35 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT