Published : 05 Mar 2015 08:16 AM
Last Updated : 05 Mar 2015 08:16 AM

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி: அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா நிராகரிப்பு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் அர்விந்த் கேஜ்ரிவாலின் முடிவை கட்சியின் தேசிய செயற்குழு நேற்று நிராகரித்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் கட்சியின் நிறுவன தலைவர்களான பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் கேஜ்ரிவாலை முன்னிலைப் படுத்துவதாக இருவரும் புகார் கூறியிருந்தனர்.

இவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கும் முன்பு கட்சியின் தேசிய ஒருங் கிணைப்பாளர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய் துள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறும்போது, “டெல்லி முதல்வராக இருப்பதால் கட்சிப் பணிகளை கவனிக்க முடியவில்லை. எனவே தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கட்சியின் தேசிய செயற்குழுவுக்கு கேஜ்ரிவால் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி எழுதியிருந்தார். ஆனால் அவரது ராஜினாமா முடிவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் கேஜ்ரிவாலின் ராஜினாமா முடிவு நிராகரிப்பது என தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கட்சிப் பதவி பறிப்பு

மேலும் கட்சியில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோரை நீக்கவும் தேசிய செயற்குழு முடிவு செய்தது. இதுதவிர யோகேந்திர யாதவின் கட்சி செய்தித் தொடர்பாளர் பதவியும் பறிக்கப் பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பெங்களூரில் சிகிச்சை

இதற்கிடையில் அரவிந்த் கேஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு ஜிந்தால் மருத்துவ மனைக்கு இன்று செல்கிறார். தலைமை மருத்துவர் பாபினா நந்தகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இயற்கை மருத்துவ முறையில் 10 நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

தன்னைச் சந்திக்கும்போது, இருமலால் அவதிப்பட்ட கேஜ்ரி வாலை பெங்களூரு மருத்துவர் நாகேந்திராவிடம் சிகிச்சை பெறு மாறு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். இதனிடையே, அண்ணா ஹசாரேவின் அறிவு ரையை ஏற்று ஜிந்தால் மருத்துவ மனையில் சிகிச்சை பெறவுள்ளார் கேஜ்ரிவால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x