Published : 20 Feb 2015 10:44 AM
Last Updated : 20 Feb 2015 10:44 AM
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் சந்திரமோகன் மாரடைப்பு காரணமாக நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர மோகன் (70). இவர் தெலுங்கு, தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
தமிழில் இவர் நாளை நமதே படத்தில் எம்ஜி.ஆருக்கு தம்பியாக நடித்துள்ளார். மேலும் சங்கராபரணம், சிரிசிரி முவ்வா, ராதா கல்யாணம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போதும் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அவருக்கு தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT