Published : 22 Feb 2015 09:55 AM
Last Updated : 22 Feb 2015 09:55 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது.
அவசரச் சட்டங்களுக்கு பதிலாக 6 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 20 வரையும் இரண்டாவது பகுதி ஏப்ரல் 20 முதல் மே 8 வரையும் நடைபெறுகிறது.
தொடக்க நாளான 23-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்று கிறார். 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 28-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மூன்று மாதங்கள் நடைபெறும் பட்ஜெட் தொடரில் நரேந்திர மோடி அரசு முதல்முறையாக தனது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த கூட்டத் தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் பாதியிலேயே அவசரச் சட்டங்கள் சார்ந்த 6 மசோதாக் களை அரசு நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதன்படி காப்பீடு, நிலக்கரி துறைகள் மீதான அவசரச் சட்டங்களை இயற்ற வேண்டிய நெருக்குதல் அரசுக்கு உள்ளது.
மக்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங் களவையில் போதிய பலம் இல்லை. இதனால் மசோதாக் களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பாஜக கோரியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் திட்டங் களை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்கிறது. எனவே பாஜக அரசின் மசோதாக்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக பெரும் பின்ன டைவைச் சந்தித்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு துணிவை அளித்திருப்பதால் பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங் கய்ய நாயுடுவும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தி அவையை சுமுகமாக நடத்த ஆதரவு கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT