Published : 24 Feb 2015 08:55 AM
Last Updated : 24 Feb 2015 08:55 AM

இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல முயற்சி

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை சுதந்திர தினம் கடந்த 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் அதிபர் சிறிசேனா சிறப்பு உரை ஆற்றினார். இந்த விழாவின் போது சிறிசேனாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட் டிருந்ததாக இலங்கை உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.

எனவே அந்த விழாவில் அதிபரின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் சிறிசேனா குண்டு துளைக் காத ஆடை அணிந்து விழாவில் பங்கேற்றார்.

இதுகுறித்து இலங்கை பொது அமைதி துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா கூறியபோது, அதிபரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத் தது. எனவே சுதந்திர தின விழாவில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து தனியாக விசாரணை நடத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார்.

அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முன்னாள் அதிபர் ராஜபக்ச மீதான ஊழல் விவகாரங்கள், போர் குற்ற விசாரணைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் முடிவுகளை திருத்தி ஆட்சியில் தொடர ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியதாகவும் வழக்கு தொடரப் பட்டு உள்ளது.

இந்தப் பின்னணியில் சிறிசேனாவை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்ப தாக தகவல் வெளியாகியிருப்பது இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x