Published : 19 Feb 2015 08:26 AM
Last Updated : 19 Feb 2015 08:26 AM
டெல்லி முதல்வராக 2-வது முறையாக பதவி ஏற்ற அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முதன்முறையாக மக்கள் குறை கேட்கும் ‘ஜனதா தர்பார்’ நடத்தினார். அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் சுமார் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கௌ சாம்பியில் வசிக்கும் கேஜ்ரிவால், முதல்வர் அலுவலகம் கிளம்பு வதற்கு முன்பாக மக்கள் தர்பார் நடத்தினார். அவரது வீட்டின் அருகி லுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலு வலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய தர்பார் நண்பகல் 12 மணி வரை நடந்தது. அதன் பிறகு டெல்லி தலைமை செயல கத்தில் உள்ள தனது அலுவலகம் கிளம்பிச் சென்றார் கேஜ்ரிவால்.
ஜனதா தர்பாரின் போது பொறுமையாக மக்களை சந்தித்த கேஜ்ரிவால் அவர்களிடம் குறை களை கேட்டறிந்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி போலீஸார் மற்றும் குடிநீர் விநி யோக வாரிய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர். இன்னும் சிலர் பூங்கொத்துக்களுடன் வந்து கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சென்றனர். பலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பி யதையும் ஏற்று கேஜ்ரிவால் அவர் களுடன் பொறுமையாக நின்றார்.
இதுபோன்ற மக்கள் தர்பார் அங்கு அடிக்கடி நடைபெறும் என எதிர்பார்த்து காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. எனினும், மக்கள் தர்பார் நடத்துவது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்களை கேஜ்ரிவால் அரசு இன்னும் வெளியிடவில்லை.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “கடந்த முறை ஆட்சியின் போது ஏற்பட்ட தவறான அனுபவம் காரணமாக மக்கள் தர்பார் நடத்துவது பற்றி நன்கு திட்டமிட்டே பிறகே அறிவிக் கப்படும். இதை படேல் நகரில் உள்ள ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்துவது குறித் தும் ஒரு யோசனை உள்ளது. இதுபோல் மக்களை நேரடியாக சந்திப்பதற்காகவே கேஜ்ரிவால் தம்மிடம் எந்த இலாக்காக்களை யும் வைத்து கொள்ளவில்லை” என்றனர்.
முதன் முறையாக டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் அம் மாநிலத்தின் தலைமை செயல கத்தில் ஜனதா தர்பார் நடத்தினார். முறையான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யாமல் கூட்டத்தை நடத்தி யதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பெரிதும் அவதிக் குள்ளாயினர். இவர்களுடன் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களும் சிக்கி பாதியி லேயே மக்கள் தர்பாரை நிறுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மக்கள் தர்பாரை இதுபோல் நடத்த மாட்டேன் எனவும் கேஜ்ரி வால் கூறி இருந்தது நினைவு கூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT