Last Updated : 28 Feb, 2015 12:15 PM

 

Published : 28 Feb 2015 12:15 PM
Last Updated : 28 Feb 2015 12:15 PM

நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்

நாடெங்கிலும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஏழை மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதற்காக கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்வு செய்து தரம் உயர்த்த திட்டம் வகுக்கப்படும் என்று கூறினார். .

மத்திய கல்வித் துறையின் சார்பில் கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசத்தில் ஐ.ஐ.எம். அமைக்கப்படும்.

அருணாச்சலப் பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளும் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x