Last Updated : 27 Feb, 2015 03:57 PM

 

Published : 27 Feb 2015 03:57 PM
Last Updated : 27 Feb 2015 03:57 PM

பலி எண்ணிக்கை 965 ஆக உயர்வு: பன்றிக் காய்ச்சலை கண்டறியும் ஆய்வகங்கள் குறைவுதான் - மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்

‘‘பன்றிக் காய்ச்சலால் இறந்தவர் களின் எண்ணிக்கை 965 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் காய்ச் சலை கண்டறியும் ஆய்வகங்கள் நாட்டில் குறைவாக உள்ளன’’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித் துள்ளார்.

மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, ஜே.பி.நட்டா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பன்றிக் காய்ச்சலை கண்டறியும் ஆய்வகங்கள் நாட்டில் குறைவாக உள்ளன. தற்போது 21 ஆய்வகங் கள் உள்ளன. இவை போதாது. எனவே, எல்லா மாநிலங்களிலும் எச்1என்1 வைரஸ் கிருமி தொற்று இருப்பதைக் கண்டறியும் ஆய்வ கங்கள் அமைக்கப்படும். இதற் கான நிதியும் உடனடியாக ஒதுக் கப்படும். பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 965 பேர் இறந்துள்ள தாகப் புள்ளிவிவரங்கள் தெரி விக்கின்றன. எனினும் மக்கள் பயப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சலுக்கான மருந் துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே வழங்கப்படு கின்றன. பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தனிப்பட்ட முறையில் நான் பல மாநில முதல்வர்களுடன் பேசி னேன். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பிஹார் போன்ற பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் முகக்கவசம் அணிவதுடன் தூய் மையை பராமரிக்க வேண்டும்.

லேசான காய்ச்சல், இருமல், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு அமைச்சர் நட்டா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x