Published : 19 Feb 2015 10:19 AM
Last Updated : 19 Feb 2015 10:19 AM
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது மனைவி மற்றும் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையான நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்குதிருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்து தரிசன ஏற்பாடு கள் செய்தனர்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது இந்திய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு வந்தார். முன்னதாக ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் திருமலைக்கு வந்த அவரை ஆந்திர வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம் பசிவராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அன்று இரவு திருமலையில் தங்கிய சிறிசேனா, நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையின்போது ஏழுமலையனை தரிசித்தார். அவருடன் அவரது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் அமைச்சர்கள் என உட்பட 18 பேர் வந்திருந்தனர்.
இலங்கை அதிபர் சாமி தரிசனம் செய்த பின்னர், அவர்களுக்கு ரங்க நாயக மண்டபத்தில் பட்டு வஸ்திரங்கள், தீர்த்த பிரசாதங்கள், நினைவு படம் போன்றவை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சாவி உடைந்ததால் சுப்ரபாதசேவை தாமதம்
ஏழுமலையான் கோயிலில் தின மும் அதிகாலை 2.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி எனப்படும் சுப்ரபாத சேவை நிகழ்ச்சி தொடங் கப்படும். இதற்கு முன்னதாக கோயில் வாசல், வெள்ளி, தங்க வாசல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர், சரியாக 3 மணியளவில் சுப்ரபாத சேவை தொடங்கி 3.30 மணிக்கு நிறைவடையும்.
ஆனால் நேற்று காலை தங்க வாசல் திறக்கும் சாவி, பூட்டுக் குள்ளேயேஉடைந்ததால், வேறு வழியின்றி கண்காணிப்பு ஊழியர்கள் பூட்டை உடைக்க நேர்ந் தது. இதனால் 10 நிமிடம் தாமதம் ஆனது. அந்த நேரத்தில் இலங்கை அதிபர் தம்பதியினர் மற்றும் அமைச்சர்கள் கோயிலுக்குள் வந்ததால் அவர்கள் சுமார் 10 நிமிடம் காத்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ், இதற்கான காரணத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஊழியர் களின் அலட்சியப் போக்கையும் கடிந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT