Published : 24 Feb 2014 09:40 AM
Last Updated : 24 Feb 2014 09:40 AM

மக்களைவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 236: ஏபிபி -நீல்சன் கருத்துக் கணிப்பில் தகவல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 236 இடங்களைக் கைப்பற்றும் எனவும், காங் கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி 92 இடங்களைக் கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக மட்டும் தனித்து 217 இடங்களில் வெல்லும், காங்கிரஸ் தனித்து 73 இடங்களில் மட்டும் வெல்லும் என புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஏபிபி செய்தி தொலைக்காட்சி -நீல்சன் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

கடந்த 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 129 தொகுதிகளில் 29,252 பேரிடம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கருத்துக் கணிப்பின்படி, இடதுசாரிகள் 29 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களிலும் மற்ற கட்சிகள் 186 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் 57 சதவீதம் பேர் நரேந்திர மோடி பிரதமராவதை விரும்புவதாகத் தெரியவந்துள்ளது. ராகுல் காந்திக்கு 18 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 3 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதே ஏபிபி செய்தி தொலைக் காட்சி -நீல்சன் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பை விட பாஜக கூட்டணி கூடுதலாக 10 இடங்களைப் பெற்றுள்ளது.

மேற்கு மாநிலங்களில் 46 சதவீத வாக்குகளையும், வட மாநிலங்களில் 38 சதவீத வாக்குகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும்.

இதர கட்சிகள்

அதிமுக 19, திரிணமூல் காங்கிரஸ் 29, பிஜு ஜனதா தளம் 16, பகுஜன் சமாஜ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 18, இந்திய கம்யூனிஸ்ட் 7, திமுக 13, ஐக்கிய ஜனதா தளம் 9.

பாதிக்கும் காரணிகள்

கருத்துக் கணிப்பில் பதிலளித்த வர்களில் 46 சதவீதத்தினர் விலை வாசி உயர்வு தங்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x