Published : 23 Feb 2015 11:14 AM
Last Updated : 23 Feb 2015 11:14 AM

பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்த உதவுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத் துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்ப தால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை யாற்றுகிறார். இதையடுத்து வரும் 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

பாஜக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பட்ஜெட் கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. பொதுமக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளுடனும் ஆவலுடனும் இந்த கூட்டத் தொடரை எதிர்பார்த்து காத்திருக் கிறார்கள். எனவே, இந்த கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பொன்னான நேரமும் வீணகக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாடாளு மன்றம் சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளின் தலைவர் களும் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம். இது அவர் களின் பொறுப்பும் ஆகும். அப்போதுதான் மக்களின் நம்பிக் கைகள், விருப்பங்களை நம்மால் நிறைவேற்ற இயலும்.

சில விஷயங்களில் மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை அறிவேன். எனவே, எதிர் க்கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க உரிய முக்கியத்துவமும், முன்னுரி மையும் வழங்கப்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் சிலர் மத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவது, தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், பன்றிக் காய்ச்சல் நிலவரம், இந்திய-பாகிஸ்தான் எல்லை பிரச்சினை, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஆவணங்கள் திருட்டு, மத்தியப் பிரதேச தேர்வு வாரிய ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியாவை சந்தித்த நாயுடு

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித் துப் பேசினார். அப்போது, நாடாளு மன்றம் சுமுகமாக நடைபெறவும், அலுவல்களை நிறைவேற்றவும் ஒத்துழைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x