Published : 20 Feb 2015 10:42 AM
Last Updated : 20 Feb 2015 10:42 AM
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்த கோட், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சூரத் ஏலத்தில் விலை கேட்கப்பட, அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
மோடியின் பெயர் பொறித்த அந்த கோட், வைர வியாபாரி ஒருவரால் ரூ.1.48 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ பரிசாக அளித்த டி-ஷர்ட் மற்றும், உலகக் கோப்பை கால் பந்து போட்டிகள் முடிவடைந்த பின் பிரேசிலுக்கு மோடி மேற்கொண்ட பயணத்தின்போது அவருக்கு அளிக்கப்பட்ட டி-ஷர்ட் போன்றவை வெறுமனே ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை மட்டுமே ஏலத்தில் விலை கேட்கப்பட்டுள்ளன.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் மோடியின் கோட் தவிர அவருக்கு பரிசாக வந்த 455 பொருட்களும் ஏலம் விடப்படுகின்றன.
ஏலத்தின் இரண்டாம் நாளான நேற்று, சுமார் 40 இளைஞர்கள் மேற்கண்ட டி-ஷர்ட்டுகளை வாங்குவதற்கு அனுமதி கோரியுள்ளதாக ஏல ஏற்பாட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT