Published : 18 Feb 2015 09:45 AM
Last Updated : 18 Feb 2015 09:45 AM
‘இசட்’பிரிவின் பாதுகாப்பை பெற்றிருக்கும் யோகா குரு ராம்தேவ், தனது பாதுகாவலர்களுக்கு தினமும் யோகா கற்றுத் தருகிறார்.
பாஜக ஆதரவாளரான ராம்தேவுக்கு, மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 24 சிஆர்பிஎஃப் வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பளித்து வருகின்றனர்.
இவ்வீரர்கள் தங்களின் வழக்கமான உடற்பயிற்சியுடன் ராம்தேவுடன் இணைந்து தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி பெறுகின்றனர்.
இது குறித்து ’தி இந்து’விடம் சிஆர்பிஎஃப் வீரர்கள் கூறும்போது, “ராம்தேவ் கற்றுத்தரும் யோகா எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பணியின்போது ஏற்படும் நெருக்கடி, மன அழுத்தத்தை எளிதாக சமாளிக்க முடிகிறது. யோகா பயிற்சியை மற்ற சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் அளித்
தால் நல்லது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT