Published : 18 Feb 2015 09:30 AM
Last Updated : 18 Feb 2015 09:30 AM
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங் களைப் பகிரங்கப்படுத்து வதற்கு, பிரதமருக்கு அதிகாரம் இல்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாயமானது தொடர்பான ஆவணங்கள், மத்திய அரசால் ரகசிய ஆவணங்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
அவ்வாறு வெளியிட்டால் அது அரசின் சில நாடுகளுடனான நட்புறவைப் பாதிக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருவனந்த புரத்தைச் சேர்ந்த ஜித் பணிக்கர் என்பவர் பிரதமர் அலு வலகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், “ ரகசிய ஆவணமாக வகைப்படுத்தப்பட்ட ஆவணத்தைப் பகிரங்கப் படுத்தவும், அவற்றை தேசிய ஆவணக்காப்பகத்துக்கு அனுப்பி வைக்கவும் பிரதமருக்கு சிறப் புரிமை ஏதேனும் உள்ளதா” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு, அலுவலக நடை முறைச்சட்டம் அல்லது பொது ஆவண விதிமுறைகள் 1997-ல் ரகசிய ஆவணத்தை, அதன் வகைப்பாட்டிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945-ம் ஆண்டு தைவானில் உள்ள டாய்ஹோகு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கருத்தை, அது தொடர்பாக அமைக்கப்பட்ட முகர்ஜி குழு மறுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT