Published : 28 Feb 2015 09:10 AM
Last Updated : 28 Feb 2015 09:10 AM
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் நேற்று அதிகாலை கொள்ளை நடந்தது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா - ஆக்ரா எல்லை யில் உள்ள பரா ரயில் நிலையம் அருகில் நேற்று அதி காலை ரயில் வந்துகொண்டிருந் தது. பயணிகள் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அப்போது 4 கொள் ளையர்கள் ரயிலின் குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைந்தனர். தூக்கத் தில் இருந்த பயணிகளை எழுப்பி மிரட்டி அவர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் பொருட்களைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் டி.கே.கன்னா கூறியதாவது:
குளிர்சாதனப் பெட்டி யில் பயணம் செய்த ராம் குமார் கார்க் என்பவர், கொள்ளையர் களை தடுத்துள்ளார். அப்போது கொள்ளையர்கள் தாக்கியதில் ராம்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பயணி களிடம் இருந்து மோதிரம், தங்க செயின், தங்க கடிகாரம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். நகை, பணத்தைப் பறித்த பின், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி தப்பியுள்ளனர்.
இந்தக் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீஸ் கண் காணிப்பாளர் கன்னா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT