Last Updated : 23 Feb, 2015 08:34 PM

 

Published : 23 Feb 2015 08:34 PM
Last Updated : 23 Feb 2015 08:34 PM

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 833 பேர் பலி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 833 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 22-ம் தேதி வரை பன்றிக் காய்ச்சலால் 833 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,484 ஆக உயர்ந்துள்ளது. இந்த வரிசையில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 3107 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளை பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 214 பேர் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x