Last Updated : 20 Feb, 2015 10:10 AM

 

Published : 20 Feb 2015 10:10 AM
Last Updated : 20 Feb 2015 10:10 AM

ரகசிய ஆவணங்கள் திருட்டு: பெட்ரோலிய அமைச்சக ஊழியர்கள் கைது

பெட்ரோலியத்துறை ரகசிய ஆவணங்களை, பணம் வாங்கிக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்ததாகக் கூறி, பெட்ரோலிய அமைச்சக ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம், எந்தெந்த நிறுவனங்களுக்கு ரகசிய ஆவணங்களை விற்றார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரகசிய ஆவணங்கள் திருட்டுப் போவதைக் கண்டறிய போலியான ரகசிய ஆவணங்களை டெல்லி போலீஸார் உருவாக்கி வைத்துள்ளனர். அவற்றைத் திருடி விற்க முயன்ற போது 5 பேரும் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. எண்ணெய் துரப்பணக் கொள்கை தொடர்பான ஆவணங்களை அவர்கள் திருடியதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x