Last Updated : 18 Feb, 2015 08:38 AM

 

Published : 18 Feb 2015 08:38 AM
Last Updated : 18 Feb 2015 08:38 AM

கன்னட மாணவர்கள் மீது தமிழ் திணிப்பு எனப் புகார்: தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க கர்நாடக அரசு திட்டம்; கன்னட அமைப்புகளும் கண்டனம்

தமிழக எல்லையோரப் பகுதியில் உள்ள‌ பள்ளிகளில் பயிலும் கன்னட மாணவர்களுக்கு கட்டாய முதல் பாடமாக தமிழ் கற்பிக்கப் படுகிறது.தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழக-கர்நாடக மாநிலங்களிடையே காவிரி நதிநீர் சிக்கல்,எல்லை பிரச்சினை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தமிழ் திணிப்பு தொடர்பாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகுவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக எல்லைப் பகுதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் எஸ்.சாயாகோல், ‘தி இந்து'விடம் கூறியதாவது:

கர்நாடக-தமிழக எல்லையோர‌ மாவட்டங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். குறிப்பாக தாள வாடி,மேட்டூர், ஓசூர், தளி உள்ளிட்ட எல்லையோர பகுதி களில் தமிழர்களை காட்டிலும் கன்னடர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் தங்களது தாய்மொழியான கன்னடத்தை கற்க விரும்புகின்றனர்.

ஆனால் தமிழக அரசு, எல்லையோரப் பகுதிகளில் உள்ள கன்னடப் பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக அறிமுகப் படுத்தியுள்ளது.இதைக் கண்டித்து தாளவாடியில் கன்னடர்கள் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

வழக்கு தொடர முடிவு

கன்னட மாணவர்களை கட்டாய முதல் பாடமாக தமிழை பயிற்று விப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. கன்னடர்கள் மீது தமிழக அரசின் இந்த தமிழ் திணிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டம் 350 ஏ,பி-ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. தமிழக அரசு இந்த தமிழ் திணிப்பை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தமிழக அரசின் மீது உச்ச‌ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்” என்றார்.

கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

இது தொடர்பாக கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறும்போது, ‘‘தமிழக எல்லைப் பகுதிகளில் வாழும் கன்னடர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். தாய்மொழியான கன்னடத்தை கற்கக் கூட தமிழக அரசு அனுமதிக்க மறுக்கிறது. இப்பிரச் சினையை சுமுகமாக தீர்க்கா விடில் தாளவாடியை கர்நாடகத் துடன் இணைக்க வேண்டும்'' என்றார்.

கன்னட மொழி மேம்பாட்டு குழுவின் உறுப்பினரும், எழுத்தாளருமான பரகூர் ராமசந்திரப்பா, ''பிறமாநிலங்களில் வாழும் மொழி சிறுபான்மை யினருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் தாய்மொழியில் கல்வி, சுதந்திரமாக செயல்படும் உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வழங்கி இருக் கிறது.த‌மிழகத்தில் வாழும் மொழி சிறுபான்மையினரான கன் னடர்களின் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு தவறியுள்ளது. எனவே, தமிழக அரசின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x