Published : 26 Feb 2015 09:06 AM
Last Updated : 26 Feb 2015 09:06 AM

மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடிய தபோல்கரை கொன்றவர்களை கண்டுபிடிக்க ஆவிகளுடன் பேச்சு: அஜித் பவார் தகவல்

மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடிய நரேந்திர தபோல்கரைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க, மகாராஷ்டிர மாநில காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் ஆவிகளுடன் பேச்சு நடத்தியதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடியவர் நரேந்திர தபோல்கர். இவர் புனேவில் 2013ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் குற்றவாளிகள் இன்னும் அடை யாளம் காணப்படவில்லை.

இந்நிலையில், புனேவின் காவல்துறை ஆணையராக இருந்த குலாப்ராவ் போல், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க அவருடைய அலுவலகத்தி லேயே தபோல்கரின் ஆவியை வரவழைத்து அதனுடன் பேச்சு வார்த்தை நடத்தும் முயற்சியை மேற்கொண்டார் என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

ஆனால் போலீஸார் அதை மறுத்தனர். எனினும் அப்போதைய மாநில அரசு குலாப்ராவை இடமாற்றம் செய்தது.

இதுகுறித்து தபோல்கரின் மகன் ஹமீது நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, "ஆவிகளுடன் போலீஸார் பேச முயற்சித்த தகவலை, தான் முன்னாள் துணை முதல்வராக இருந்தபோது அஜித் பவார் ஏன் தெரிவிக்கவில்லை? எப்படி காவல்துறை குலாப்ராவ் குற்றமற்றவர் என்று சொன்னது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x