Last Updated : 05 Feb, 2015 10:33 AM

 

Published : 05 Feb 2015 10:33 AM
Last Updated : 05 Feb 2015 10:33 AM

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது: கேஜ்ரிவால் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லியில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுக்கு சாதகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் தில்லுமுல்லு நடை பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறிய புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளை கேஜ்ரிவால் நேற்று சந்தித்தபோது, அவரிடம் உண்மை நிலை குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

“அந்த இயந்திரத்தின் மென் பொருளில் மாற்றம் செய்ய சாத்தியம் இல்லை. 3 கன்ட்ரோல் யூனிட், 4 பேலட் யூனிட் ஆகிய வற்றின் பூட்டுகள் உடைந்திருந் தன. வாக்குப்பதிவு இயந்திரங் களை இடமாற்றம் செய்வதற்காக வாகனங்களில் ஏற்றி, இறக்கும் போது இந்த பூட்டுகள் உடைந் திருக்கலாம். அந்த யூனிட்டுகள் பொது பார்வையாளர்கள் முன் னிலையில் மாற்றப்பட்டன” என்று அதிகாரிகள் விளக்கினர்.

மேலும் இந்த விளக்கத்தை அறிக்கையாக அளித்தனர். அதில் ஆம் ஆத்மி பிரதிநிதி ஒருவர் கையெழுத்திட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக விழிப்புடன் இருக் கும்படி வாக்காளர்களை கேட்டுக் கொள்ளும் வகையில் வாக்குச் சாவடி முன் பேனர்கள் வைப் பதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை கோருவோம் என்று கேஜ்ரிவால் முன்னதாக கூறி யிருந்தார்.

அதிகாரிகள் சந்திப்புக்கு பிறகு, கேஜ்ரிவாலிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு தொடர்பான புகாரை கேஜ்ரிவால் நேற்று முன்தினம் எழுப்பினார். “டெல்லி கன்டோன்மென்ட் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதித்து பார்த்தபோது, 4 இயந்திரங்களில் எந்தப் பொத் தானை அழுத்தினாலும் வாக்கு கள் பாஜகவுக்கு பதிவாகிறது” என்று அவர் குற்றம் சாட்டி யிருந்தார்.

கேஜ்ரிவால் பெயரை நீக்க முடியாது

டெல்லி வாக்காளர் பட்டியலி லிருந்து ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலின் பெயரை நீக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் கிரண் வாலியா மற்றும் மவுலிக் பாரத் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு முன்னிலையில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. வாக்காளர் பட்டியலில் கேஜ்ரிவால் பெயர் சரியாகவே பதியப்பட்டுள்ளது. அதனை நீக்க முடியாது. கேஜ்ரிவால் டெல்லிவாசியா இல் லையா என்ற பிரச்சினையில் தலை யிடமுடியாது. அதனை தேர்தல் ஆணையத்திடம் முறையிடுங்கள். ஆட்சேபணைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான பி.ஆர். சோப்ரா, கேஜ்ரிவாலின் பெயர் முறையாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x