Last Updated : 20 Feb, 2015 08:35 AM

 

Published : 20 Feb 2015 08:35 AM
Last Updated : 20 Feb 2015 08:35 AM

பிஹார் சட்டப்பேரவையில் இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஐக்கிய ஜனதா தள அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேருக்கு தடை

பிஹார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நந்த கிஷோர் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில சட்டப்பேரவையில் ஒரு கட்சி ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. சபாநாயகரின் நடவடிக்கை எதேச்சதிகாரமானது. பிரச்சினை அடிப்படையில் முதல்வர் மாஞ்சிக்கு ஆதரவு அளிக்க பாஜக நினைக்கிறது.

பிஹார் சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

பிஹாரில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் சட்டப்பேரவைத் தலை வராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஆனால் முதல்வர் பதவியை மாஞ்சி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதை யடுத்து சட்டச்சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்நிலையில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படு கிறது. ஏனெனில், நிதிஷ் குமாருக்கு 128 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், 87 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக ஆதரவளித்தாலும் மாஞ்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது கடினம்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 4 பேரின் பதவியைப் பறித்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் தடை உத்தரவு பெற்றனர்.

இந்நிலையில், மாஞ்சி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க அனுமதிக்கக் கோரி 4 எம்எல்ஏக்களும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் இக்பால் அகமது மற்றும் சக்ரதாரி சரண் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜோதி சரண் வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், வாக்கெடுப்பில் பங்கேற்க 4 எம்எல்ஏக்களுக்கு தடை விதித்தது.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களும் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். மாஞ்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 12 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 8 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டிலேயே இதுதான் முதல்முறை:

அதற்காக மாஞ்சி அரசில் பாஜக சேர முயற்சிக்கிறது என்பது தவறு. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமார் இருந்தபோது, குடியரசு தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது, காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜிக்கு, நிதிஷ் குமார் ஆதரவளித்தார். எங்கள் கூட்டணியில் இருந்த மற்ற உறுப்பினர்கள் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளித்தனர். எனவே, பிரச்சினை அடிப்படையில் ஆதரவு வழங்குவதாலேயே அந்த அரசில் சேர்ந்துவிட்டது என்று கூறக்கூடாது. இவ்வாறு நந்த கிஷோர் யாதவ் கூறினார்.

குதிரை பேரம்: ஐக்கிய ஜனதா தளம் புகார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் வஷிஸ்த நாராயண் சிங் கூறியதாவது: பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாகிவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க (குதிரை பேரம்) முயற்சி நடைபெறுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பப்பு யாதவ், எங்கள் கட்சியைச் சேர்ந்த ஷோஹர் தொகுதி எம்எல்ஏ ஷர்புதீனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, மாஞ்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் அமைச்சர் பதவியும் பணமும் தருவதாகக் கூறியுள்ளார். இதற்கு பாஜகவும் உடந்தையாக உள்ளது. ஆனாலும் எம்எல்ஏக்கள் அனைவரும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக உள்ளனர். மாஞ்சி வாக்கெடுப்பில் தோற்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பதவி: மாஞ்சி அழைப்பு

பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி பேசியதாவது: ஏழைகளின் நலனுக்காக நான் செயல்பட்டேன். அதற்காக என்னை பதவி விலகச் சொன்னார்கள். நான சாக தயாராக இருக்கிறேன். ஆனால் யாருக்காகவும் தலைகுனிய மாட்டேன்.

நான் செய்தது தவறு இல்லை என்று நீங்கள் கருதினால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவு அளிக்குமாறு உங்கள் எம்எல்ஏக்களிடம் கூறுங்கள். அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதற்காக எனக்கு எதிராக அவர்கள் வாக்களிக்க முடிவு செய்திருந்தால், என்னிடமும் அமைச்சர் பதவி காலியாக இருக்கிறது என்று அவர்களிடம் கூறுங்கள். எனக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்களை நான் அமைச்சராக்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாஞ்சிக்கு ஆதரவு: பாஜக திடீர் முடிவு

நம்பிக்கை வாக்கெடுப்பில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “மாஞ்சிக்கு ஆதரவளிப்பதால் பிற்காலத்தில் பிரச்சினை எழுமா என கேட்கிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. இப்போதைய நிலையைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு எடுத்துள்ளோம். தலித்களை நிதிஷ் குமார் அவமதித்துள்ளார். அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக மாஞ்சியை ஆதரிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x