Published : 17 Feb 2015 04:52 PM
Last Updated : 17 Feb 2015 04:52 PM
பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சற்று கூடுதல் சலுகை காட்டுவதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க மாஞ்சிக்கு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர். இது பற்றி கருத்துக் கூறிய நிதிஷ் குமார், “2000-ஆம் ஆண்டு எனக்கு 7 நாட்களே அவகாசம் அளிக்கப்பட்டன. ஆனால் இரண்டு சூழ்நிலைகளையும் ஒப்பிடக்கூடாது.” என்றார் நிதிஷ் குமார்.
2000-த்தில் ஐக்கிய ஜனதா தளம், சமதா கட்சி, பாஜக, லோக் ஜனசக்தி, மற்றும் சுயேட்சைகள் 324 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் 152 இடங்களில் வென்றனர். இது ஜார்கண்ட் தனிமாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, நிதிஷ் குமாருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்களே அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நிதிஷ் குமார் விலகினார்.
இந்நிலையில் மாஞ்சிக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது, சற்று பாரபட்சமான கால அவகாசம்தான் என்கிறார் நிதிஷ் குமார்.
“எங்களிடம் 130 எம்.எல்.ஏ.க்கள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் மாஞ்சிக்கு ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் அளிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?” என்று கூறுகிறார் நிதிஷ் குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT