Published : 11 Apr 2014 12:38 PM
Last Updated : 11 Apr 2014 12:38 PM
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸாபர்நகரில் வியாழக்கிழமை அன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில், 70 சதவீத வாக்குகள் பதிவாகின.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகரில் கடந்த ஆண்டில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இருந்தும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பழைய இடங்களில் 75 சதவீத வாக்குகளும், இடம்பெயர்ந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மறுவாழ்வுப் பகுதிகளில் 72 சதவீத வாக்குகளும் பதிவாயின.
மறுவாழ்வு இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். புதிய இடங்களில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய இயலாது என்பதால், அவர்கள் அனைவரும் புங்கா, லாங்க், லிசாத், ஹசன்பூர், பஹாவ்டி, குத்பா மற்றும் குத்பி ஆகிய கிராமங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT