Last Updated : 18 Feb, 2015 11:10 AM

 

Published : 18 Feb 2015 11:10 AM
Last Updated : 18 Feb 2015 11:10 AM

பிரதமர் மோடியின் பெயர் பொறித்த ஆடை இன்று ஏலம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த அவரது பெயர் பொறிக்கப்பட்ட ஆடை சூரத் நகரில் இன்று ஏலம் விடப்படுகிறது.

அதன் மூலம் பெறப்படும் தொகையானது தூய்மை இந்தியா திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பெயர் பொறித்த ஆடையுடன், 455 பொருட்களும் ஏலம் விடப்படுகின்றன. இவை கடந்த 9 மாதங்களில் பல்வேறு தருணங்களில் மோடி பரிசாக பெற்ற பொருட்களாகும்.

கடந்த 25-ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது, மோடி இளஞ்சிவப்பில் மெல்லிய கோடுகள் கொண்ட சூட் அணிந்திருந்தார்.

பிரதமரின் படங்களை பெரிது படுத்தி பார்க்கும்போது, இளஞ் சிவப்பு கோடுகள் முழுவதும் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்று எழுத்துகள் பொறிக்கப் பட்டிருந்தன. இந்த குளோசப் படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவின. கூடவே கிண்டல் செய்தும் பதிவு கள் வெளியாகின. “மோடி தனது ஆடையை யாராவது திருடி விடுவார்கள் என்று பயப்படுகிறாரா?” என்றும் “மோடி சண்டைக்குச் செல்வதாக அவரது ஆடை வடிவமைப்பாளர்கள் கருதிவிட்டனரா?” என்றெல்லாம் பதிவுகள் வெளியாகின.

மேலும், அந்த ஆடையை தயாரிக்க ரூ.10 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கூறி பல்வேறு கட்சியினரும் சர்ச்சையைக் கிளப்பினர்.

இந்நிலையில், சர்ச்சைகுள்ளான மோடியின் அந்த சூட் இன்று ஏலம் விடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்த ஏலம் நடைபெறும் என சூரத் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆடையில் பெயர் பொறித்துக்கொண்ட முதல் தலைவர் அல்ல மோடி. இதற்கு முன் முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது ஆடை கோடுகளில் தனது பெயரை பொறித்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x