Published : 18 Feb 2015 09:23 AM
Last Updated : 18 Feb 2015 09:23 AM
ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் திடீரென பிரசவ வலி ஏற்படவே, அதில் உள்ள கழிப்பறையிலேயே ஒரு பெண் ணுக்கு குழந்தை பிறந்தது.
எனினும் அந்த சிசு கழிப்பறை துவாரத்தின் வழியாக தண்டவாளத்தில் தவறி விழுந்தது. ஆனால் காயம் ஏதுமின்றி அந்த சிசு உயிர் பிழைத்ததாக போலீஸார் தெரிவித்துள் ளனர்.
22 வயது நிறைமாத கர்ப்பிணி தனது கணவர், தாயாருடன் சூரத்கர் பகுதியிலிருந்து ஹனுமன்கர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். இந்நிலையில் அங்கேயே திடீரென பிரசவ வலி ஏற்படவே கழிப்பறைக்கு சென்று குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்த பெண். அதன் பிறகு அவர் அங்கேயே மயங்கி கிழே விழுந்துவிட்டார் என்று தெரிகிறது.
பிரசவம் நடந்தபோது அந்த ரயில் ஹனுமன்கர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தது. கழிப் பறையில் அந்த பெண் விழுந்து கிடப்பதை குடும்பத்தார் பார்ப் பதற்குள் ரயில் ஹனுமன்கருக்கு புறப்பட்டது. அங்கு போய்ச் சேர்ந்ததும் போலீஸார் உதவி யுடன் அந்த பெண்ணை மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதனிடையே, தண்ட வாளத்தின் நடுவில் பச்சிளம் சிசு கிடப்பதைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் அதுபற்றி போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து குழந்தையை பத்திரமாக மீட்ட போலீஸார், அதை அதன் தாயிடம் ஒப்படைத்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT