Published : 17 Feb 2015 10:44 AM
Last Updated : 17 Feb 2015 10:44 AM

இபிஎப்ஓ திட்டத்தில் வயது வரம்பு 60 ஆக உயர்கிறது

அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒரு தொகையை செலுத்தி வருகின்றனர். அவர்கள் 58 வயது வரை இத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்துகின்றனர். 58 வயதுக்குப் பிறகு அவர்கள் இபிஎப்ஓ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த வயது வரம்பை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தலாம் என்று ஓய்வூதிய செயல் கமிட்டி (பிஐசி) பரிந்துரை செய்துள்ளது.

மேலும் 60 வயதில் இருந்து ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு ஊக்கத் தொகை வழங்கவும் அதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் ஆராய வேண்டும் என்றும் செயல் கமிட்டி பரிந்துரை வழங்கி உள்ளது.

இந்த பரிந்துரை குறித்து வரும் வியாழக்கிழமை நடக்க உள்ள கூட்டத்தில் இபிஎப்ஓ அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளனர். ஓய்வூதிய திட்ட வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்துவதன் மூலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதி பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் அதிகரிக்கும். ஏனெனில் அவர்களுக்கு 58 வயதில் இருந்து கூடுதலாக 2 ஆண்டுகள் வேலையும் தொடர்ந்து கிடைக்கும்.

இதுபோன்ற அம்சங்கள் குறித்து இபிஎப்ஓ.வின் ‘சென்ட்ரல் போர்டு ஆப் டிரஸ்டீஸ் (சிபிடி) ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x