Last Updated : 09 Feb, 2015 10:48 AM

 

Published : 09 Feb 2015 10:48 AM
Last Updated : 09 Feb 2015 10:48 AM

டெல்லியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறு வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், "31 மற்றும் 132 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்த கணக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியிருந்த வாக்குகளின் கணக்கும் ஒத்துப்போகவில்லை. இதனையடுத்து அந்த இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுதேர்தல் நடைபெறுகிறது" என கூறியிருந்தனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 67.14% வாக்குகள் பதிவாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x