Published : 18 Feb 2015 09:48 AM
Last Updated : 18 Feb 2015 09:48 AM

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.250 கோடி கருப்பு பணம் வெள்ளையானது: மத்திய நிதியமைச்சகம் கண்டுபிடிப்பு

வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, ரூ.250 கோடி கருப்புப் பணம் போலி நிறுவனங்கள் மூலம் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளதை மத்திய நிதியமைச்சகம் கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு (சிஇஐபி) அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு உதவுவதற்காகவே சிலர் முகவர்களாக செயல்படுவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது இந்த முகவர்கள் கருப்புப் பணத்தைப் பெற்று போலி நிறுவனங்களுக்கு வழங்குவார்கள். அந்த போலி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வோருக்கு காசோலையாக அந்தப் பணத்தை திருப்பி வழங்குகிறது.

இந்த முறையின் கீழ் வங்கிக் காசோலைகள் மூலமாகவே ரூ.249 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் காசோலையை வழங்கிய நிறுவனங்கள் குறித்து வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும் இந்த பரிமாற்றத்தின்போது சேவை வரி ஏதாவது செலுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராயுமாறும் மத்திய கலால் வரி புலனாய்வுத் துறை இயக்குநரகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x