Published : 27 Feb 2015 11:00 PM
Last Updated : 27 Feb 2015 11:00 PM
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தன்மானப் பிரச்னையாக கருதாமல் எதிர்கட்சிகள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்ல் அளித்துப் பேசினார்.
'' நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நீக்க அரசு தயாராக இருக்கிறது. தவறான குறிப்புகளை நீக்காமல், அரசு கர்வத்துடன் செயல்படாது. இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் .
மதத்தின் பேரில் பாகுபாடு காட்ட ஒருவருக்கும் உரிமை கிடையாது . முதன்மையான இந்தியா என்பதே அரசின் மதம். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் வழிபாடு.
நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக ஊழல் இருந்தது. இனி அத்தகைய நிலை இருக்காது ஊழல் இல்லாத அமைப்பைக் கொண்டு வர எதிர்கட்சிகள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் .
முந்தைய காங்கிரஸ் அரசின் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை கைவிடுவது பாஜகவின் நோக்கம் அல்ல.
கழிப்பறை வசதிகள் இல்லாததால் ஏராளமான சிறுமிகள் பள்ளிப்படிப்பை கைவிடும் நிலை உள்ளது. பெண்களின் கௌரவத்துடன் தொடர்புடைய சுகாதாரத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் '' என்று பிரதமர் பதிலுரையில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT