Last Updated : 27 Feb, 2015 09:35 AM

 

Published : 27 Feb 2015 09:35 AM
Last Updated : 27 Feb 2015 09:35 AM

புதுமையை புகுத்த ‘காயகல்ப்’ கவுன்சில்

ரயில்வே துறையில் புது மையை புகுத்துவதற்காக ‘காய கல்ப்’ என்ற பெயரில் ஒரு கவுன்சில் அமைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ளது. இது ரயில் களில் நவீன தொழில்நுட்ப வசதி களை ஏற்படுத்துவது குறித்த ஆலோசனையை வழங்கும்.

மேலும் வரும் நிதியாண்டில் ரயில்வே துறையை கணினி மயமாக்குவதற்கு ரூ.393.36 கோடியும் ரயில்வே ஆராய்ச்சிப் பணிகளுக்காக ரூ.40.44 கோடியும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் துறையின் அடிப்படை ஆராய்ச் சிக்காக குறிப்பிட்ட சில பல்கலைக் கழகங்களில் 4 ரயில்வே ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படும்.

ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தை (ஆர்டி எஸ்ஓ) சிறந்த செயல்முறைசார் ஆராய்ச்சி நிறுவனமாக மேம் படுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.

ரயில்வே திட்டங்களின் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரயில்வே, மனிதவள மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் ஆகிய துறை சார்ந்த அமைச்சகங்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

வாரணாசியில் உள்ள ஐஐடி-யில் ரயில்வே தொழில் நுட்பத்துக்காக ‘மாளவியா’ பெயரில் ஓர் இருக்கை ஏற்படுத் தப்படும். ரயில்வே துறையில் பயன்படுத்த வேண்டிய புதிய பொருட்களை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு உதவும்.

ரயில்வே துறை தொடர்பான குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அடிப்படை மற்றும் செயல்முறைசார் ஆராய்ச் சிக்கு முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளைப் பெறுவதற்காக தொழில்நுட்ப போர்ட்டல் நிறுவப் படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x