Published : 19 Feb 2015 10:36 AM
Last Updated : 19 Feb 2015 10:36 AM
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப். 22) அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கள்கி ழமை (பிப். 23) தொடங்கி, மே 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக, முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
ஊழலை வெளிப்படுத்துவோர் பாதுகாப்பு சட்டம், சேவைகள் மற்றும் குறைகள் நிவர்த்தி பெறுதல் உரிமைச் சட்டம், மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்சினை சட்டத் திருத்தம், தேசிய மகளிர் ஆணைய சட்டத் திருத்தம், ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
16-வது மக்களவையின் 4-வது கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றத்தில் வரும் 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 27-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. நிதியமைச்சர் அருண் ஜேட்லி 28-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு வசதியாக, விடுமுறை நாளான சனிக்கிழமை நாடாளு மன்றம் கூடுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT