Last Updated : 23 Feb, 2015 11:17 AM

 

Published : 23 Feb 2015 11:17 AM
Last Updated : 23 Feb 2015 11:17 AM

சுந்தரவனக் காடுகள் மோசமானதால் இந்தியாவுக்கு ரூ.1,290 கோடி இழப்பு: உலக வங்கி அறிக்கையில் தகவல்

‘‘மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளில், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியா வுக்கு ஆண்டுதோறும் ரூ.1,290 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது’’ என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள சுந்தர வனக் காடுகள், 54 குட்டி தீவுகள் அடங்கிய பகுதியாகும். இதன் ஒரு பகுதி வங்கதேசத்தில் உள்ளது. இந்தத் தீவுப் பகுதிகளில் 44 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.சுந்தர வனக் காடுகளை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்நிலையில், சுந்தரவனக் காடுகளை மேம்படுத்துவது தொடர்பாக மேற்கு வங்க அரசுடன் இணைந்து உலக வங்கி ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சுந்தரவனக் காடுகளின் சுற்றுச் சூழல் பாதிப்பால் ஆண்டுதோறும் ரூ.670 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படு கிறது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளால் ரூ.620 கோடி இழப்பு ஏற்படுகிறது. மொத்த மாக ஆண்டுக்கு ரூ.1,290 கோடி அளவுக்கு இந்தியா நஷ்டம் அடை கிறது. அலையாத்தி காடுகளை அழித்தல், புயல் பாதிப்பு, வேளாண் உற்பத்தி குறைந்தது, மீன்பிடித் தொழில் பாதிப்பு போன்ற பல காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

சுந்தரவனக் காடுகள் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்படவில்லை. வெள்ளம், புயல், அரிப்பு, கடல் நீர் மட்டம் உயர்வு, உலக வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால் சுந்தரவனக் காடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற் றில் புயலால்தான் அதிக சேதம் ஏற்பட்டுள் ளது ஆய்வில் தெரியவருகிறது. புயலால் மக்கள் உயிரிழப்பு, காயம், விளை நிலங்கள் பாதிப்பு, வீடுகள் சேதம் என எல்லாவற்றையும் கணக்கிடும் போது இந்த பாதிப்பு பெரிதாக உள்ளது.

சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக சுந்தரவனக் காடுகளில் வசிக்கும் மக்களின் உடல்நலமும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. அங்கு முக்கியமாக குடிநீர் விநியோகம், சுகாதாரம், தூய்மை போன்ற அடிப்படை அம்சங்கள் இல்லை. சமையலுக்காக எரிக்கப் படும் பொருட்களால் அங்கு காற்று மாசுப் பாடு அதிகரித்துள்ளது. இதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏராள மானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சுந்தரவனக் காடுகளைப் பாது காக்கவும், அங்குள்ள மக்களின் நலனை மேம்படுத்தவும் அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அலையாத்தி (மாங்குரோவ்) காடு களை மீண்டும் அமைக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்கும் பழக்கம், வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற விஷயங் களை மக்களுக்குக் கற்றுத் தரவேண்டும். இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x