Last Updated : 06 Feb, 2015 09:56 AM

 

Published : 06 Feb 2015 09:56 AM
Last Updated : 06 Feb 2015 09:56 AM

உலகின் மிகப்பெரிய நேரடி மானிய திட்டமானது: வங்கி மூலம் எல்பிஜி மானியம் பெறும் திட்டத்தில் 10 கோடி பேர் இணைப்பு - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

சமையல் எரிவாயு (எல்பிஜி) மானி யத்தை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தில் (பாஹல் யோஜனா) இதுவரை 10 கோடி பேர் இணைந் துள்ளனர். இதன்மூலம் உலகில் உள்ள நேரடி மானிய திட்டங்களி லேயே மிகவும் பெரியது என்ற பெருமை இதற்குக் கிடைத் துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்ப தாவது:

நாட்டில் மொத்தம் 15.3 கோடி எல்பிஜி இணைப்புகள் உள்ளன. இதில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் (65%) பாஹல் திட்டத் தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2 மாதங்களில் இந்த சாதனையை எட்டியதற்காக வாடிக் கையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்.

இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டு, மானியம் உரியவர் களை நேரடியாக சென்று சேரும். இதனால் மானியச் செலவு குறைந்து நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளருக்கு மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் அவர்கள் சமையல் எரிவாயுவை சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

அதாவது 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.417 ஆக உள்ளது. சந்தை விலை ரூ.605 ஆக உள்ளது. இவ்விரண் டுக்கும் இடையே உள்ள வித்தி யாசத் தொகை அவ்வப்போது மாறு படும். அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதுகுறித்து மத்திய பெட் ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, “சமையல் எரிவாயுவுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்குகிறது. இந்த நேரடி மானிய திட்டத்தால் முறைகேடு தடுக்கப்படுவதால் 10 முதல் 15 சதவீதம் வரை மானிய செலவு மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது” என்றார்.

சீனா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற நேரடி மானிய திட்டம் அமலில் உள்ளது. ஆனால், இது வரை எந்த ஒரு நாட்டிலும் நேரடி மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 2.2 கோடியைத் தாண்டவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x