Published : 25 Feb 2015 12:02 PM
Last Updated : 25 Feb 2015 12:02 PM
தொண்டு செய்வதே மதத்தைப் போதிக்க சிறந்த வழி என்று போப்பாண்டவர் கூறிய கருத்தை, அன்னை தெரஸாவின் தொண்டு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதோடு ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
தொண்டு நிறுவன நிகழ்ச்சி சேவை ஒன்றில் பேசிய மோகன் பாகவத், இங்கு செய்யப்படும் சேவை அன்னை தெரஸா இந்தியாவில் செய்ததுபோன்றது அல்ல. இது எந்த உள்நோக்கமும் இல்லாத சேவை. முன்பு நமது மக்களுக்கு அன்னை தெரஸா உதவியதன் முக்கிய நோக்கம், இந்திய மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தக் கருத்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், போப்பாண்டவர் பிரான்சிஸ், "தொண்டு செய்வதே மதத்தை போதிக்க சிறந்த வழி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததை சிலர் ரீ-ட்வீட் செய்து வருவதால் போப்பின் கருத்து ட்விட்டரில் மீண்டும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
போப் பிரான்சிஸ் இந்தக் கருத்தை சென்ற ஜனவரி 25 ஆம் தேதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT