Last Updated : 12 Feb, 2015 09:28 AM

 

Published : 12 Feb 2015 09:28 AM
Last Updated : 12 Feb 2015 09:28 AM

டெல்லி தேர்தலில் பிரபலங்களின் வெற்றி, தோல்வி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர். பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி 2-வது இடத்துக்கும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராகக் கருதப்பட்ட அஜய் மாக்கன் 3-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கிரண் பேடி 2,277 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.ஜி.பக்கா 65,919 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பாஜகவின் வெற்றித் தொகுதி யாக கருதப்படும் கிருஷ்ணா நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு டாக்டர் ஹர்ஷவர்தன் வெற்றி பெற்றிருந்தார். பிறகு நடந்த மக்களவை தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் நிறுத்தப்பட்ட அவர், வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் ஆனார். இந்நிலையில் எக்காரணம் கொண்டும் தனது முதல்வர் வேட் பாளர் தோல்வி அடையக்கூடாது என்று எண்ணி கிரண்பேடியை கிருஷ்ணா நகரில் பாஜக நிறுத்தியது. ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

பாஜக பிரபலங்கள்

பாஜக சார்பில் ஒரு சிறு எதிர் பார்ப்புடன் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து நிறுத்தப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவரான நூபுர் சர்மாவுக்கு 2-வது இடம் கிடைத் துள்ளது. இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான கிரண்வாலியாவுக்கு வெறும் 4,781 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால், அவர் வைப்புத்தொகையை இழந்துள் ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணா தீர்த் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். அவர், 34,638 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹசாரி லால் சௌகானிடம் தோல்வி அடைந்துள்ளார். கிரண்பேடியின் பெயர் அறிவிக்கப்படுவது வரை பாஜகவின் முதல்வர் வேட்பாள ராகக் கருதப்பட்ட ஜெக்தீஷ் முகியும் ஜனக்புரி தொகுதியில் 25,580 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.

இவர் இங்கு ஐந்துமுறை வெற்றி பெற்று சாதனை படைத்தவராவார். கடந்த முறை இதேதொகுதியில் இவரை வீழ்த்திய ராஜேஷ் ரிஷி இந்தமுறையும் வெற்றி பெற் றுள்ளார்.

காங்கிரஸ் பிரபலங்கள்

காங்கிரஸின் முதல்வர் வேட் பாளராகக் கருதப்பட்ட அஜய் மாக்கனுக்கு சதர் பஜார் தொகுதி யில் 16,331 வாக்குகளுடன் 3-வது இடம் கிடைத்துள்ளது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் 2-வது மகளான சர்மிஸ்டா முகர்ஜி கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டி யிட்டு வெறும் 6,102 வாக்குகள் பெற்று, வைப்புத் தொகையை இழந்தார். காங்கிரஸின் முன்னாள் மாநில அமைச்சர் ராஜ்குமார் சௌகானுக்கும் வைப்புத் தொகை பறிபோனது.

5 முறை எம்எல்ஏவான ஹாரூண் யூசுப் மற்றும் முன் னாள் பேரவைத் தலைவர் சவுத்ரி பிரேம்சிங் ஆகியோரும் படு தோல்வி அடைந்தனர்.

ஆம் ஆத்மியில் நீக்கப்பட்டவர்கள்

ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட வினோத்குமார் பின்னி, பாஜகவில் இணைந்து பட்பட்கன்ச் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இந்த தொகுதி யில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோதியா 28,761 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோல், ஆம் ஆத்மி ஆட்சியில் சட்டப்பேரவைத் தலை வராக இருந்து அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.தீருக்கும் தோல்வி கிடைத்துள்ளது.

ஆம் ஆத்மி பிரபலங்கள்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள் அனைவருமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ப.சிதம்பரம் மீது காலணி வீசிய முன்னாள் பத்திரிகையாளர் ஜர்னைல்சிங், மது புட்டி சர்ச்சைகளில் சிக்கிய நரேஷ் பல்யாண் மற்றும் மதன் லால், மூத்த தலைவர் கோபால் ராய், முன்னாள் அமைச்சர்கள் ராக்கி பிர்லா, சோம்நாத் பாரதி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

62 தொகுதிகளில் 2-வது இடம்

பாஜக வெற்றி பெற்ற மூன்று தொகுதிகளில், ஜெக்தீஷ் பிரதான் முஸ்லிம்கள் 50 சதவீதம் உள்ள முஸ்தபாபாத்தில் 10,000 வாக்கு கள், முன்னாள் மாநில தலைவ ரான விஜேயந்தர் குப்தா மற்றும் ஓம்பிரகாஷ் சர்மா ஆகிய இருவரும் 6,000 -க்கும் குறை வான வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக போட்டியிட்ட 65 தொகுதிகளில் 62 தொகுதிகளில் 2-வது இடம் பிடித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சி போட்டியிட்ட ஐந்தில் ஒரு தொகுதியில் மட்டும் 2-வது இடம் பிடித்துள்ளது. காங்கி ரஸ் 4 தொகுதிகளில் மட்டும் 2-வது இடம் பெற்றுள்ளது. ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் ஒரு தொகுதியில் 2-வது இடம் பிடித்தது.

ஆம் ஆத்மி இழந்த மூன்று தொகுதிகளில் இரண்டில் இரண் டாவது இடம் கிடைத்துள்ளது. ஒன்றில் காங்கிரஸ் இரண்டாவது இடமும் ஆம் ஆத்மி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x