Published : 26 Feb 2015 08:41 AM
Last Updated : 26 Feb 2015 08:41 AM

காங்கிரஸ் தலைவராக ஏப்ரல் மாதம் பொறுப்பேற்கிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வரும் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவர் பதவியை 1998 முதல் சோனியா காந்தி வகித்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பதவியில் ராகுல் தனது தாய்க்கு பதிலாக அமரவிருக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட் டில் கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்கவிருக்கிறார்” என்றன.

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காததால், ராகுல் காந்தி மீது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. கட்சியி லேயே சிலர் எதிர்மறை கருத்து களை கூறினர்.

ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயண அறிவிப்பை கூறியவுடன் கட்சியின் எதிர்காலம் பற்றி சிந்திக்க அவருக்கு இந்த ஓய்வு தேவைப்படுவதாக மூத்த தலைவர்கள் கூறினர்.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “ராகுல் காந்தி தனது வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்கும் முன் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்வதற்கு இந்தப் பயணம் உதவும்” என்றார்.

ராகுல் காந்தி, கடந்த 2013 ஜனவரி யில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முதன்மை தேர்தல் பேச்சாளராக விளங்கும் ராகுல் காந்தி, ‘நேரு காந்தி’ குடும்பத்தில் 4-வது தலைமுறை யைச் சேர்ந்தவர் ஆவார். அவர் துணைத் தலைவராக பதவியேற்ற பின்னரும் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில் கட்சியில் அடிப் படை மாற்றங்கள் செய்வதும், மூத்த தலைவர்களுக்கு பதிலாக இளைய வர்களை புகுத்துவதும் அவசியம் என்று ராகுல் தனக்கு நெருங்கிய தலைவர்கள் மூலம் தனது தாயா ருக்கு ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

முன்னதாக கட்சியின் பல்வேறு நிலை தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தியதாக வும் அவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் ஏற்க விரும்பிய தாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x