Published : 21 Feb 2015 05:31 PM
Last Updated : 21 Feb 2015 05:31 PM

பள்ளிகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வலியுறுத்தல்

பள்ளிகளில் தினமும் விளையாட்டு வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிக்க தற்போதுள்ள வாரம் ஒரு நாள் விளையாட்டு வகுப்புக்கு பதிலாக நாள்தோறும் விளையாட்டு வகுப்பை நடத்த பள்ளிகள் முன்வரவேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். செனையில் இன்று ஆங்கில நாளேடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள "நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாடியபோது இவ்வாறு கூறினார்,

விளையாட்டுக் களம் மட்டும்தான் அந்தந்த விளையாட்டு சார்ந்த அணைத்து வீரர்களின் சமூகக் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் களமாக இருப்பதால் ஆசிரியர்கள் விளையாட்டு பற்றிய தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் திறமையை தெரிந்துகொண்டு அந்தந்த துறைகளில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

விளையாட்டு ஒன்றுதான் நாட்டின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதால் இதுபற்றிய அறிவை ஊக்குவிக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும். கிரிக்கட் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் இதர விளையாட்டுகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற கேள்விக்கு பதிலிளித்த போது, மத்திய அரசின் விளையாட்டு துறை இணையதளத்தில் கிரிக்கட் தவிர்த்து 15 விளையாட்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்தார்.

விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என்று இந்த உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா கேட்டுக்கொண்டார். மேலும் விளையாட்டுக்கு வரிச்சலுகை பெறும் நிறுவனங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் திரு உமர் அப்துல்லா தெரிவித்தார். கிரிக்கெட் தவிர அரசின் சலுகை பெறும் பல்வேறு விளையாட்டு நிறுவனங்களில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரத்தோர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x