Published : 06 Feb 2015 10:12 AM
Last Updated : 06 Feb 2015 10:12 AM
சர்ச்சைக்குள்ளான ‘ஏஐபி நாக் அவுட்’ நிகழ்ச்சியின் வீடியோ யூ டியூ பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சியைத் தயாரித்த “ஆல் இந்தியா பக்சோட்” (All India Backchod) சுருக்கமாக ஏஐபி என்று அழைக்கப்படும் அந்தக் குழு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏ.ஐ.பி. நாக் அவுட் நிகழ்ச்சியின் வீடியோவை இப்போதைக்கு நீக்கி விட்டோம். விரைவில் இது குறித்து பேசுவோம்” என குறிப்பிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், இயக்குநர் கரன் ஜோஹார் ஆகியோர் பங்கேற்ற 'ஏஐபி நாக் அவுட்' என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை ஓர்லி பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் தரக்குறை வான வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டனர். இது ரோஸ்ட்டடு எனப்படும் வறுத்தெடுக்கும் வகையான நகைச்சுவை எனக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ அண்மையில் யூ டியூபில் வெளியானது. இதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர். ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் ஏஐபி நிகழ்ச்சி குறித்த பதிவுகள் வலம் வரத் தொடங்கின.
இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் இந்நிகழ்ச்சிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, யூ டியூபில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT