Published : 27 Feb 2015 04:51 PM
Last Updated : 27 Feb 2015 04:51 PM
நாட்டில் ரூ.3,78 லட்சம் கோடி மதிப்பிலான மானியத்தால் ஏழை எளிய மக்கள் பயனடைவது குறைவு என்றும், வறுமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இது உகந்தது அல்ல என்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
2015-16 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மானியம் குறித்து இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
'அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகளுக்கு அளிக்கப்படும் மானியம், எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது போன்று தோன்றுகிறது என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
எனினும், இந்த மானியம் எளிய மக்கள் பணவீக்கத்தையும் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தையும் எதிர்கொள்ள உதவி உள்ளது. இந்த மானியங்கள் குறித்து கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வு அறிக்கை கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்த மானியங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.24% அளவுக்கு, அதாவது ஏறக்குறைய ரூ.3,78,000 கோடியாக இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. வறுமையை எதிர்த்துப் போரிடுவதற்கு இது சிறந்த ஆயுதமாக இருக்க இயலாது என்பதை இந்த ஆய்வு அறிக்கை எடுத்துரைக்கிறது.
எளிய மக்களுக்கான பல்வேறு மானியங்களை பற்றி குறிப்பிடும் இந்த ஆய்வு, அறிக்கை மானியங்கள் பல சமயங்களில் பிற்போக்கு நடவடிக்கையாகவே இருக்கும் என்று கூறுகிறது.
இப்போது வழங்கப்படும மானியங்கள் பற்றி ஆய்வு, இந்த மானியங்களால் எளிய மக்களைவிட பொருளாதார ரீதியில் மேம்பட்ட குடும்பங்கள் பயன் பெற்றுவருகிறார்கள் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்டியுள்ள இந்த ஆய்வு அறிக்கை, மின்சாரத்துக்கான மானியத்தால் ஒரளவு பொருளாதார ரீயில் உயர்நிலையில் உள்ளவர்களுக்கு பயன் கிடைக்கும் என்று கூறுகிறது. எனினும், மானியங்களை அகற்றுவதோ அல்லது படிப்படியாக குறைப்பதோ விருப்பத்தக்கதும் அல்ல சாத்தியமானதும் அல்ல என்ற கருத்து தெரிவித்துள்ளது.
ஜன்தான் திட்டம், ஆதார், செல்பேசி எண் ஆகிய மும்முனை- 'ஜாம்' முறையை கடைப்பிடிப்பது மானியம் எளிய மக்களை சென்றடைவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது. மேலும் இதன் பயன்கள் உரியவர்களுக்கு சேதாரம் இல்லாமல் கிடைக்கச்செய்யும்' என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT