Published : 12 Feb 2015 10:41 AM
Last Updated : 12 Feb 2015 10:41 AM
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா பாடுபடும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மா கூறினார்.
இதுகுறித்து மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். இதன் மூலம் இரு நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவும், பயங்கர வாத்தை ஒழிக்கவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் அமெரிக்கா பாடுபடும். இதில் ஆப்கானிஸ்தானும் அடங்கும். வரும் காலத்தில் ஆப்கானிஸ் தானின் கூட்டாளிகளாக இந்தி யாவும் பாகிஸ்தானும் இருக்கும்.
ஸ்திரமான, அமைதியான, வளமான சீனாவே அமெரிக்காவின் விருப்பம். ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளின் பாது காப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சீனாவுடன் ஆக்கப்பூர்மான உறவையே விரும்புகிறோம். என்றாலும் மனித உரிமைகள், கடல்வழிப் பயண பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சர்வதேச விதிகள் மற்றும் நெறிகளை பின்பற்றுமாறு சீனாவை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
அமெரிக்க வர்த்தக நிறுவனங் களின் இணைய தள செயல் பாடுகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். பிராந்திய அளவில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய அமைப்புகளை அமெரிக்கா வலுப்படுத்தும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT