Last Updated : 21 Jan, 2015 05:50 PM

 

Published : 21 Jan 2015 05:50 PM
Last Updated : 21 Jan 2015 05:50 PM

புலிகள் எண்ணிக்கையில் உத்தரகாண்டுக்கு 2வது இடம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முந்தைய கணக்கெடுப்பில் 227 எண்ணியிக்கையில் இருந்த புலிகள் தற்போது 340ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் புலிகள் அதிகமாக உள்ள கர்நாடகாவுக்கு அடுத்த இடத்தை உத்தரகாண்ட் பிடித்துள்ளது.

இதுகுறித்து கார்பெட் புலிகள் சரணாலய இயக்குநர் சமீர் சின்ஹா பிடிஐயிடம் கூறுகையில், உத்தரகாண்ட்டில் புலிகளின் எண்ணிக்கையை ஊக்கப்படுத்தும் எழுச்சியாக இது அமைந்துள்ளது. கடந்த கணக்கெடுப்பில் 227 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது. உண்மையில் இதற்கான அனைத்துப் பெருமைகளும் அந்த மலை மாநிலத்தில் இருக்கும் ஒரே ஒரு புலிகளின் சரணாலயத்தையே சாரும்.

மத்திய பிரதேசத்தில் நாட்டிலேயே அதிக புலிகள் இருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குக் காரணம் அங்கு ஆறு புலிகளின் சரணாலயங்கள் இருந்தன. தற்போதைய புலிகளின் கணக்கெடுப்பின்படி 406 புலிகள் உள்ள கர்நாடகாவுக்கு அடுத்த இடத்தில், நாட்டிலேயே இரண்டாவது இடத்தை உத்தரகாண்ட் பிடித்துள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பாதுகாப்பு மதிப்பீட்டுப் போக்கின் தன்மையில், கார்பெட் புலிகள் சரணாலயம் 'நல்ல' என்ற மதிப்பீட்டிலிருந்து 'மிகநல்ல' என்ற இடத்திற்கு உயர்ந்துள்ளது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x