Published : 09 Jan 2015 11:08 AM
Last Updated : 09 Jan 2015 11:08 AM
நாட்டில் கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் அவசியம் என்றும் இது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
தெலங்கானா மாநில பாஜக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் அமித் ஷா தலைமையில் ஹைதரா பாத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் உறுப் பினர்கள் சேர்க்கை திட்டத்தை தொடங்கி வைத்த அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் பாஜக உறுப் பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 10 கோடி உறுப்பினர் களை சேர்க்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா வில் 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 2019-ம் ஆண்டு நடை பெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக் குள் தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் செயலாற்றுவோம்.
கட்டாய மத மாற்றத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மசோதாவுக்கு அனைத்து கட்சி களும் ஒத்துழைப்பது அவசிய மாகும். மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி அமைத்த ஒரு மாதத்திலேயே கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது இது தொடர்பான 700 பேரின் பெயர் பட்டியல் நீதி மன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரனை நடை பெற்று வருகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
நடிகரின் பர்ஸ் மாயம்
தெலுங்கு திரைப்பட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜு, நேற்று முன் தினம் இரவு, அமித் ஷாவை வரவேற்க ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத் துக்கு சென்றார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் பல கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரம் வரை பணம் வைத்திருந்ததாக கிருஷ்ணம் ராஜு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT